Thursday, May 3, 2012

கொங்குத் தமிழ் சிறப்பு

கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை.

தமிழின் சிறப்பு ‘ழ’ என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு ‘ற’ மற்றும் ‘ங்’ என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, “தண்ணிவார்த்துகுட்டு”, ‘தண்ணிஊத்திக்கிட்டு’ என்று கூறுவார்கள்.

மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் ‘ங்கோ’ போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது ‘ங்கோ’ என்பதற்கு பதில் ‘ங்’ போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று ‘கோ’ வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் (அகரவரிசையில்)

* அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே – அந்த இடம், அந்த இடத்திலே. “நீ அக்கட்டாலே போய் உட்காரு”
* அங்கராக்கு – சட்டை
* அட்டாரி, அட்டாலி – பரண்
* அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
* அப்பு - அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
* அம்மாயி - அம்மாவின் அம்மா
* அப்பத்தாள் - அப்பாவின் அம்மா
* ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
* இக்கட்டு - இந்த இடம்
* இட்டாரி (இட்டேறி) - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
* இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
* உண்டி – (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
* ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
* எச்சு - அதிகம்.
* எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
* ஏகமாக - மிகுதியாக
* ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
* ஒடக்கான் - ஓணான்
* ஒப்பிட்டு - போளி
* ஒளப்பிரி - உளறு “இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்”
* ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) – விருந்தினர்
* ஓரியாட்டம் – சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
* கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
* கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
* கரடு - சிறு குன்று
* கண்ணாலம் - கல்யாணம் \ திருமணம்
* கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
* குரல்வளை \ தொண்டை
* கோடு - கடைசி ( கோட்டுக்கடை – கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு – அந்த கடைசில பாரு)
* சாடை பேசுறான் - மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
* சிலுவாடு - சிறு சேமிப்பு
* சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
* சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
* சுல்லான் (சுள்ளான்?) - கொசு
* செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
* சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
* தாரை - பாதை
* தொண்டுப்பட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் – ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
* துழாவு - தேடு

Tuesday, May 1, 2012

பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!



“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!
-வினோதன்-

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-


கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)


RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.


இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.

கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி -kalingatamil@yahoo.co.in

நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள்.

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.